மூடுபனி முக்காடு போட்ட
மலைச்சிகரம்!
காடுகளில்..
வசிப்பிடங்களைத்தேடித்திரியும்-
விலங்கினங்கள்!
சலனமற்று ஓடும் நதியின்..
இயற்கை எழில் கொஞ்சும்
அழகு!
சலனத்தோடு குதித்திறங்கும்
அருவியின் அற்புதம்!
கண் இமைக்குள் சிக்காமல்-
தொடரும் அலைகளைத்
தயாரித்து அனுப்பி
சந்தோஷிக்கும்
கடல்!
தாலாட்டும் மேகத்தை..
தாரவாந்து போகாமல்-
பாதுகாத்தும்..
அடைகாத்தும்..
வைத்திருக்கும்-
வானம்!
மயங்கிப்போன..
எல்லாவற்றையும்-
உயிர்ப்பித்து-
ஆனந்தமாக்கும்..
சூரிய சூட்டின் சிரிப்பில்-
வசியமாகி..
குதுகலமாயிருக்கிறது..
குழந்தைகளைச் சுமக்கும்
வீடுகள்!
பனி படர்ந்த தேசத்துக்குள்..
உயிர்ப்பின் நிழலாக..
உலா வருகிறது
வெய்யில்!
Tuesday, December 28, 2010
உயிர்ப்பின் நிழலாக..
Friday, December 17, 2010
ஹைக்கூ
*வாழ்வின் வெற்றியை
செதுக்கியது
சிக்கனம்.
*விளைநிலம்
வீசியெறிந்தனர் கத்திகள்
போர்மேகம்.
*கவலை மறந்து
கவிதை தீட்டினான்
தோட்டத்தில் மின்மினி.
*கத்தியில்லை ரத்தமில்லை
போரில் முதலீடானது
அன்பு.
*வேரின் அழுகையில்
துளிர்த்தது செடி
வறண்ட பூமி.
*இடி இடித்த மேகத்தோடு
பேசியது மின்னல்
வீரம்.
*வறண்ட பூமி
வீரத்தோடு புறப்பட்டது
மழை நீர்.
*”கத்தி” பேசியவனுக்கு
முதல் பரிசு
வீரம்.
*வரப்பு தகராறு
வாய் கிழிய சண்டையிட்டனர்
சகோதரிகள்.
செதுக்கியது
சிக்கனம்.
*விளைநிலம்
வீசியெறிந்தனர் கத்திகள்
போர்மேகம்.
*கவலை மறந்து
கவிதை தீட்டினான்
தோட்டத்தில் மின்மினி.
*கத்தியில்லை ரத்தமில்லை
போரில் முதலீடானது
அன்பு.
*வேரின் அழுகையில்
துளிர்த்தது செடி
வறண்ட பூமி.
*இடி இடித்த மேகத்தோடு
பேசியது மின்னல்
வீரம்.
*வறண்ட பூமி
வீரத்தோடு புறப்பட்டது
மழை நீர்.
*”கத்தி” பேசியவனுக்கு
முதல் பரிசு
வீரம்.
*வரப்பு தகராறு
வாய் கிழிய சண்டையிட்டனர்
சகோதரிகள்.
Wednesday, December 8, 2010
திண்ணை-82,வேட்கையின் நிழல் நூல் வெளியீடு,காட்சிப்பதிவு
வந்தவாசியில் நடைபெற்ற கவிஞர் ஆரிசனின் வேட்கையின் நிழல் நூல் வெளியீட்டு காட்சிப்பதிவுகள்.
Wednesday, December 1, 2010
வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்
சீரழிந்து கிடக்கும் வந்தவாசி கோட்டை-காட்சிப்படங்கள்

null
null
null
null
வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்
null
போர் குறித்த பெயர்ப்பலகை
null
சகதியும்,உறுத்தும் குப்பைகளோடு கோட்டை அகழி
null
null
null
null
null
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு-சில படங்கள்.
null
null
null
null
null
null
null
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு
இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து 25 இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அனைத்து 50 இடுகைகளையும் தேர்ந்தெடுங்கள் | |||||||||||||||||||||||||||||||
அனைத்து 50 இடுகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்வை காலிசெய் | |||||||||||||||||||||||||||||||
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்... தமுஎகச/வந்தவாசி திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்து
ஆசியன் அகாதெமி மருத்துவப் பயிற்சிப் பள்ளி வந்தவாசியில் தமுஎகச வின் திண்ணை 83 நிகழ்வு 30.11.2010 செவ்வாய் காலை நடைபெற்றது.இரா.சிவகுமார் தலைமைதாங்கினார்.வந்தவாசிப்போர் குறித்து வழக்கறிஞர் எல்.குமார்,அ.ஜ.இஷாக்,ஆரிசன்,பூங்குயில்சிவகுமார்,எம்.கோவிந்தராஜன் அகியோர் பேசினர். வழக்கறிஞர் எல்.குமார் பேசியதிலிருந்து... நம் வாழ்க்கையிலிருந்து வரலாற்றைப் பிரிக்க முடியாது.இதற்கு நாம் முன்னோர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும்,தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது,நாடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் யாவும் போர் குறித்து அதிகம் பேசுகிறது.பகவத்கீதையின் குருசேத்திரப்போரும் ,அசோக மன்னனின் கலிங்கத்துப்போரும் மனிதகுலத்துக்கும்,தனிமனிதனுக்கும் பாதை வகுத்துத்தந்தது எனலாம்.நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான மையப் புள்ளியாக வந்தவாசிப்போரைக் கருதலாம்.வாழ்க்கை வரலாறாக இருக்க வேண்டும்.ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் 1760ஜனவரி22ல் நடந்த வந்தவாசி சண்டையில் இங்கிலாந்துப் படை வெற்றி பெற லாலி,புஸ்ஸிஆகிய பிரஞ்சுப் படை தோற்கிறது.இந்த தோல்விக்கான காரணத்தால் லாலிக்கு பிரஞ்சு நாட்டில் தூக்கு தண்டணை விதிக்கப்படுகிறது என்பதே வந்தவாசிப் போராகும். நன்றி நாவலாசிரியர் கா.பரிதா கூறினார். |
Sunday, November 14, 2010
கவிஞர் ஆரிசனின்’வேட்கையின் நிழல்’ கவிதை நூல் வெளியீடு
திண்ணை-82,கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ நூல் வெளியீடு
வந்தவாசி,நவம்பர்13.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-82 நிகழ்வு இன்று மாலை வந்தவாசி ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’நூல் வெளியீட்டு விழாவாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பூங்குயில் சிவகுமார் தலைமை தாங்கினார்.ந.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூலினை முனைவர் பாலரமணி,நிகழ்ச்சி நிர்வாகி சென்னைத்தொலைக்காட்சி அவர்கள் வெளியிட கவிஞரும்,எழுத்தாளருமான பெரணமல்லுர் சேகரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்தும், இக்கால இலக்கியம் குறித்தும் கவிஞர் ஜீவி மாநிலத்துனைத்தலைவர் தமுஎகச, பேசினார்.கவிஞரும் மா திரைப்பட உதவி இயக்குனரும், மின் இலக்கியப்பூங்கா மாநில பொதுச்செயலாளருமான தமிழியலன்,வந்தவாசி கெளரவத்தலைவர் பொறிஞர் பூ.காளிமுத்து,குழந்தை எழுத்தாளர் இரா.மனோன்மணி,அ.அண்ணாமலை தமுஎகச மாவட்டப் பொருளாளர்,தொழிலதிபர்கள் இரா.சிவக்குமார்,அ.ஜ.இஷாக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கவிஞர் ஆரிசன் ஏற்புரை வழங்கினார்.தமிழ்ராசா நன்றி கூறினார்.
நூல் குறித்து கவிஞர் ஜீவி நிகழ்த்திய இலக்கிய உரையிலிருந்து.....
-------------------------------------------------------------------------------------------------
திண்ணைகளை இடித்துவிட்டு வரவேற்பறைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலும்,தொலைக்காட்சிப்பெட்டியில் தொலைந்து போகிற மக்களை (இந்த வந்தவாசி திண்ணையில், தமுஎகச அரங்கு நிறைய) கவிஞர் ஆரிசனின் ’வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மக்கள் திரளோடு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.காலையில் கைது/மாலையில் விடுதலை/ஞாயிற்றுக்கிழமைத்தமிழன் என்று ஒரு புதுக்கவிஞன் பேசுகிறான்.1940ல் எழுத்து இயக்கத்தாலும்,1970களில்வானம்பாடி இயக்கத்தாலும்,1980களில் மக்கள் கவிஞர்களாலும் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு வரும் புதுக்கவிதைகள் பல்வேறு தளங்களில் வெளிப்பட்டு வருகிறது.கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள்.இந்நிலையில் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிச்ச விதைகளாக ஆரிசனின் கவிதைகள் இருக்கின்றன.புதிய பொருளாதாரக் கொள்கைகளில் குறைந்து போயிருக்கிற மனித நேயம்,மதவெறியால் நடக்கிறபடுகொலைகள்,பாதகச் செயல்கள் இவற்றுக்கிடையேதான் ஆரிசனின் கவிதைகள் பரிணாமம் பெறுகின்றன.’மதம் குலைத்துப் போடுகிறது வானவில்லின் ஒற்றுமையை’என்று சரியாக கவிஞர் ஆரிசன் தனது வேட்கையின் நிழலில் பதிவு செய்திருக்கிறார்.தமுஎகசஎனும் பிரம்மாண்டமான இலக்கிய அமைப்பின் விரிந்து பரந்த மேடைகளில் பல கவிஞர்களும், படைப்பாளிகளும்,கலைஞர்களும் அறிமுகமாகி பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை செய்து வருகிறார்கள்.பாரதி,பாரதிதாசன்,பட்டுக்கோட்டை தொடங்கி இப்போது எழுதுகிற புதுக்கவிஞர்கள் வரை பகிர்ந்து கொள்ளும் மேடையாக தமுஎகச விளங்கி வருகிறது.ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
எதையும்- எல்லாப் பொருட்களில் இருந்து பலரும் பார்க்காத,பலருக்கும் தெரியாத நுட்பத்தைக் கண்டறிந்து சொல்பவனே கவிஞனாவான்.இப்படி எழுதும் கவிதைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.இந்த வரலாற்றை நேக்கிக் கவிஞர்கள் பயணிக்க வேண்டும் இதுமட்டுமின்றி .படைப்பை மட்டுமல்ல படைப்பாளியை உருவாக்குகிற மனோபாவம் கவிஞர்களுக்கு வேண்டும்.அது இயல்பாகவே கவிஞர் ஆரிசனுக்கு வாய்த்திருக்கிறது.படைப்பாளியின் படைப்பு மனத்தை அங்கீகரிக்க குடும்பச்சூழல்,சமூகச்சூழல் அமைகிற போது தான் ஒரு கவிஞனோ,படைப்பாளியோ உச்சம் பெறுகிறான்.இதன்றி விட்டு விட்டுப் போன பின்னும் விரல் தொட்டு அழைத்து நம்மோடு ஒரு ஞாபக யுத்தம் நடத்துவது தான் கவிதை! அத்தகைய கவிதைகளை,கவிஞர்களை உருவாக்குவதற்கு அரங்கம் நிறைந்த ரசிகர்களோடு விளங்கும் இந்தத் திண்ணை நிகழ்வுகள் நம்பிக்கையூட்டுகிறது.பல்வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருக்கிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கவும்,சமூக அக்கறையோடு விவாதிக்கவும் இந்தத் திண்ணை மேலும் மேலும் விரிவடையட்டும்.உங்கள் வந்தவாசி ஊரே அதற்கு சாட்சியாக விளங்கட்டும்.தமுஎகச வந்தவாசி கிளைக்கும், நூல் வெளியிட்ட கவிஞர் ஆரிசனுக்கும்,கிளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, November 10, 2010
திண்ணை 81-இளம் இயக்குனர் பிரியஷரண்-உரை
நான் ஊரீஸ் மேனிலைப்பள்ளி,வேலூரில் படித்தவன்,எனக்குப் பாடம் நடத்திய மாணிக்கம் ஆசிரியரை மறக்கமுடியாது.சினிமாவுக்கான கனவுகளை என் மனதில் விதைத்தவரும் அவரே!பைபிள் கதைகளை அடியொற்றி நாடகங்கள் மாணவர்களை வைத்துப் போடுவார். நடிக்கும் மாணவர்களைப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் வட்டமிடும்.என் விருப்பத்தை ஆசிரியரிடம் சொன்னேன்,உரிய நேரம் வரும் நடிப்பாய் என்று சொன்னார்.எனக்குள்ளான சினிமாக் கனவுகள் மலரத்தொடங்கியது.நான் கனவுகள் சுமந்து சென்னைக்கு சென்றேன்.பல சினிமாக் கம்பெனிகள் வாயிற்கதவுகளைத்தட்டினேன்.எனது நண்பர் மூலமாகதெலுங்குப் பட இசையமைப்பாளர் மணிஷர்மாவைச்சந்தித்தேன்.கதை சொன்னேன்.அவர் நண்பர் ஒருவரிடம் கதை சொல்லச் சொல்லி அனுப்பினார்.அவரிடமும் போய் சொன்னேன்.இறுதியில் படத்தை இயக்க வாய்ப்பு தந்தார் மணிஷர்மா.அவரது தயாரிப்பில் ”ஹேப்பி ஹேப்பி ஹா”எனும் படத்தை இயக்கி தெலுங்குப்பட உலகில் சாதனை படைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.என்னை அடிக்கடி தொடர்புகொண்டு என்வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரிக்கும் பூங்குயில்சிவகுமாரையும் மறக்கமுடியாது..தெலுங்கு சினிமா உலகத்தில் தமிழாட்களை நன்கு மதிக்கிறார்கள்.உரிய மரியாதையோடு நடத்துகிறார்கள்.இந்தநாளிலே தேசியவிருது பெற்ற வந்தவாசியைச் சேர்ந்த ஆசிரியர் பொன்.விஜயகுமார் அவர்களுக்கும் பாராட்டு விழாவும் நடக்கிறது.இது எனக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆசிரியர்களே திறவுகோளாக இருக்கிறார்கள்.அது என் வாழ்விலும் நடந்திருக்கிறது.இந்த இனிய நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பளித்த தமுஎகச,வந்தவாசி கிளைக்கும் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி.
Sunday, November 7, 2010
திண்ணை-81 :புகைப்படங்கள்
திண்ணை-81(07.11.2010 ஞாயிறு)
பாராட்டை ஏற்றுக்கொண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு.பொன்.விஜயகுமார் பேசுகையில்...
நான் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையில் நான் மாடு மேய்க்கப் போக வேண்டும்.நான் தேசூர் அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி யில் இரண்டாவது மதிப்பெண் பெற்றுத் தேறினேன்.எனக்கு கணித ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.இருந்தாலும் அப்போது எனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி இல்லை.செய்யாறு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.இந்நிலையில் வந்தவாசிக்குச் சென்று டைப் (தட்டச்சு)கற்றுக்கொள்ள வீட்டில் முடிவு செய்தனர்.அதற்காக ஒரு சைக்கிள் வாங்க பெற்றோர் மிகவும் சிரமப் பட்டனர்.அந்த நேரத்தில் தான் எனக்கு திண்டிவனம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல் மாணவராக சேர்த்துக்கொள்ளும் உத்திரவு வந்தது.பெற்றோர்களின் கூலி மூலமும் கடனிலும் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.முதன்முதலில் எனக்கு மகமாயிதிருமணி என்னும் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் துவக்கினேன்.கொரக்கோட்டை,தெள்ளாறு,மீசநல்லூர்,டி.மாம்பட்டு,கொண்டையாங்குப்பம்,
பொன்னூர்,கொடியாலம்,என பல்வேறு பள்ளிகளில் பணி செய்து இன்று கூத்தம்பட்டு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.நான் பணியாற்றி இடங்களில் எல்லாம் கிராம பொது மக்களும்,தலைவர்களும் அதிக அளவில் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.அவர்களுக்கெல்லாம் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.சில தலைவர்கள் என் பணியைப் பாராட்டி, பாராட்டுவிழாக்களும், பரிசும்,கடிதங்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.எனது உழைப்பும்,பணியும் வீண்போகவில்லை என்று நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது.2006ம் ஆண்டில் எனக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இந்த ஆண்டு(2009ம் ஆண்டுக்காண)தேசிய நல்லாசிரியர் விருதினை நான் டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கையால் விருது வாங்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்.என் வாழ்வில் மிகப் பெரும் சொர்க்கத்தைக் கண்ட உணர்வு ஏற்பட்டுள்ளது.ஒரு சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த விருது வாழ்க்கையில் நான் அடைய நினைத்த எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்ததாக நினைக்கிறேன்.என் பெற்றோர்களுக்கும்,இறைவனுக்கும் இதை காணிக்கையாக்கிக்கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.இத்மட்டுமின்றி எனது துணைவியார் திருமதி சி.பத்மாபாய் அவர்களும் நான் டெல்லியில் ஜனாதிபதியிடம் விருது வாங்கும் போது அவர்கள் தமிழகாரசின் நல்லாசிரியர் விருதை அதே05.09.2010அன்று சென்னையில் வாங்கினார்கள் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத்தருகிறது.நான் முடிந்த மட்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்,முடியவில்லையானால் சும்மா இருந்துவிடுவேன்.யாருக்கும் தொந்திரவு செய்யமாட்டேன்.என் பணியில் சற்று கடுமையாக இருப்பேன்.”நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” எனும் குறுந்தொகைப் பாடல் வரிகளில் என் நிஜத்தைத் தெரிந்து கொள்ளலாம் என சொல்லி முடிக்கும் போது திண்ணை வாசக நேச நெஞ்சங்களுக்கும் வறிய வாழ்வு சிகரம் தொட்டவெற்றியைப் போற்றிய தமுஎகச வின் திண்ணை நிகழ்வுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
நாமெல்லோரும் ஒண்ணு என்று பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டோடு,இது கற்றவர் நிறைந்த மண்ணு,கொற்றவரும் திரும்பிப்பார்த்து கேட்கவைக்கும் மண்ணு,கதை..கவி செய்யும் இலக்கிய ஆற்றல் நிரம்பிய மண் என வந்தவாசியைச் சொல்லாமல் இருக்க முடியாது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்,வந்தவாசி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-81 இலக்கிய நிகழ்வு இன்று காலை 11.00மணிக்கு காளி முனுசாமி செட்டியார் சத்திரம்,தேரடி,வந்தவாசியில் தோழர் ந.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு பொன்.விஜயகுமார் அவர்களுக்குப் பாராட்டும்,இளம் திரை இயக்குனர் பிரியஷரண் தன் திரை இயக்கம் குறித்த பகிர்வுகளுமாக நடைபெற்றது.முனைவர் ம.மஹாலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பூங்குயில்சிவகுமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.பொன்.விஜயகுமார் அவர்களைப் பாராட்டி பழ.சீனுவாசன்,முதல்வர் ஜோதி நிதி உதவிப் பள்ளி,தெள்ளாறு ,கவிஞர்.ஆரிசன்,தமுஎகச,மாவட்டசெயலாளர்,அ.அண்ணாமலை,மாவட்டப் பொருளாளர்,அ.ஜ.இஷாக்,ஜவுளி அதிபர் ஆகியோர் பேசினர்.நிகழ்வில் கிளை நிர்வாகிகள் இரா.சிவகுமார்,இர.இராமலிங்கம் மற்றும்திரு சக்திவேல்,உதவி தொடக்கக்கல்வி அலுவலர்,வந்தவாசி;பொன்னெழில்சந்திரன்,தலைமையாசிரியர்; ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் கிளை பொருளாளர் கி.உதயகுமார் நன்றி கூறினார்.

Saturday, November 6, 2010
Friday, November 5, 2010
கவிதை
வீதியில் கொளுத்திப் போட்டனர்
ஊர் முழுக்க
புரளி.
ஒளியின் விட்டத்தில்
சுற்றிச் சுழன்றது
சங்கு சக்கரம்.
திரிக்க முடியாமல்
கொளுத்தியது குழந்தை
தீபாவளிக் கயிறு.
வளைக்க முடியவில்லை
கம்பியைச் சுற்றிலும்
ஒளி விழுதுகள்.
எப்போதும் ஓடும்
ஜீவநதியோ?
ஹைக்கூ.
தரையில் நின்று
பூ மழை பொழிகிறது
புஸ் வானம்.
தரையில் புழுதி கிளப்பி
வானத்தில் இடி இடிக்கிறது
ஒபாமா வருகை.
ஊர் முழுக்க
புரளி.
ஒளியின் விட்டத்தில்
சுற்றிச் சுழன்றது
சங்கு சக்கரம்.
திரிக்க முடியாமல்
கொளுத்தியது குழந்தை
தீபாவளிக் கயிறு.
வளைக்க முடியவில்லை
கம்பியைச் சுற்றிலும்
ஒளி விழுதுகள்.
எப்போதும் ஓடும்
ஜீவநதியோ?
ஹைக்கூ.
தரையில் நின்று
பூ மழை பொழிகிறது
புஸ் வானம்.
தரையில் புழுதி கிளப்பி
வானத்தில் இடி இடிக்கிறது
ஒபாமா வருகை.
தீபாவளி-2010
குழந்தைகள் வானத்தில் தீபாவளி..
by Aari Aarison on Thursday, November 4, 2010 at 9:18pm
புஸ்வானம் கொளுத்தினேன்குப்பிக்குள் பூத்திருந்த மலர்களின் வாசத்தை உணரமுடிந்தது..கயிறு கொளுத்திப்பார்த்தேன்ஒளி சிந்தும் அழகை ரசிக்க முடிந்தது.தீபமாய் எறிந்த விளக்கில்சுறு சுறு கம்பியை நீட்டினேன்சிதறிய ஒளியின் அழகை உணர முடிந்தது.கட்டாந்தரையில் சங்கு சக்கரம் கொளுத்தினேன்வாழ்வின் சுழற்சியை வாசிக்கமுடிந்தது..கருப்பு மாத்திரையை கொளுத்தினேன்படமெடுத்து ஆடிய பாம்பின்கொதிப்பை அறிய முடிந்தது.மத்தாப்புக்குச்சியைஉரசிப்பார்த்ததில்மெளனத்தின் அழகில் கரைய முடிந்தது..வெடிச்சத்தம் உணர மறுத்தவெகுளித்தனம் நிறைத்த குழந்தைகள் வானத்தில்குதூகலமாய் கொண்டாடப் படுகிறது..தீப ஒளித்திருநாள்!
Saturday, October 30, 2010
சும்மா பாடுங்க..
அன்பு கொண்ட மனிதருக்கு
உடம்பில் கொம்பு முளைக்குதா?
ஆசை கொண்டு பேசும் போது
காசு வந்து குவியுதா?
சந்தையிலே சரக்கு வந்து
மந்தையாக இருக்குதா?
சாதிமதம் பார்க்காமத் தான்
வாங்கிப் போக முடியுதா?
என்பு போர்த்த உடலுக்குள்ளே
குறை இருக்கு தெரியுதா?
.........................................................
பழகிச் சொல்லும் போது தானே
பகையும் வந்து சேருது?
ஊனமெல்லாம் உடலில் இருந்து
மனது நோக வைக்குது?
தானம் கொடுத்து வாழ்ந்த
நமது பரம்பரையும் அழுவுது?
சுயநலத்தில் வாழ்வும் தான்
இருந்து கொண்டு துடிக்குது?
பொதுநலத்தில் புதிய வாழ்வு
விடியவும் தான் ஏங்குது?
சுயநலமா? பொதுநலமா?
எந்தநலம் தெரியலே?
சமூகத்தின் விடுதலைக்கு
சத்தியந்தான் பொதுநிலை?
..............................................................
உலகமயம் எதிர்த்து நிற்க
மார்க்சியம் தான் கடைநிலை?
புரிந்து கொண்டால் நமக்கில்லை
வாழ்க்கையிலே இடைநிலை?
வறுமை எனும் பேய் ஒழிய
சமத்துவமே விடுதலை?
பேதமற்று வாழ்ந்திடத்தான்
பாதை மெல்ல மாறணும்?
நமக்கு....
எதுவும் சாத்தியமே என்றுசொல்லி
வாழும் வாழ்க்கை முதல் நிலை?

குழந்தைப் பாடல்
சின்ன விதை விதைத்துமே
பெரிய மரத்தைப் பார்க்கலாம்
மண்ணுக்குரிய தரத்திலே
மரத்தின் செழிப்பை ரசிக்கலாம்!
நட்டு வைத்த விதையிலும்
நல்ல செடியும் முளைக்கலாம்
கெட்டுப் போன மண்ணிலும்
விதையும் கருகி சாகலாம்!
பச்சைநிறத்தில் பாசமும்
இச்சை கொள்ள வைக்குமே
மொட்டுப் பூவும் சிரித்துமே
மனதில் மகிழ்ச்சி பூக்குமே!
வானம் மழையைத் தூவிட
கானம் கூவி அழைக்குது
விலங்குக் கூட்டம் யாவையும்
வெளியில் வந்து திரியுது!
மனது மட்டும் இருக்கணும்
முடிந்த மட்டும் வளர்க்கணும்
கனவு வென்று சிரித்திட
நனவுக் காடும் மலரணும்!
மேகம் சிரித்து வாழவும்
காடும் செழித்து வளரணும்
தாகம் தீர்க்க உதவிடும்
தண்ணீர் அதுவும் தந்திடும்!
குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியும்
குழந்தை வளர்ப்பில் நிச்சயம்
உலக வாழ்வின் மகிழ்ச்சியும்
உயிர்க் காடுகளில் சாத்தியம்!
மரம் வளர்த்து வாழ்ந்துமே
மனித குலத்தை நேசிப்போம்
மறம் வளர்த்து வாழவும்
அன்னை பூமியை வாசிப்போம்!
பெரிய மரத்தைப் பார்க்கலாம்
மண்ணுக்குரிய தரத்திலே
மரத்தின் செழிப்பை ரசிக்கலாம்!
நட்டு வைத்த விதையிலும்
நல்ல செடியும் முளைக்கலாம்
கெட்டுப் போன மண்ணிலும்
விதையும் கருகி சாகலாம்!
பச்சைநிறத்தில் பாசமும்
இச்சை கொள்ள வைக்குமே
மொட்டுப் பூவும் சிரித்துமே
மனதில் மகிழ்ச்சி பூக்குமே!
வானம் மழையைத் தூவிட
கானம் கூவி அழைக்குது
விலங்குக் கூட்டம் யாவையும்
வெளியில் வந்து திரியுது!
மனது மட்டும் இருக்கணும்
முடிந்த மட்டும் வளர்க்கணும்
கனவு வென்று சிரித்திட
நனவுக் காடும் மலரணும்!
மேகம் சிரித்து வாழவும்
காடும் செழித்து வளரணும்
தாகம் தீர்க்க உதவிடும்
தண்ணீர் அதுவும் தந்திடும்!
குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியும்
குழந்தை வளர்ப்பில் நிச்சயம்
உலக வாழ்வின் மகிழ்ச்சியும்
உயிர்க் காடுகளில் சாத்தியம்!
மரம் வளர்த்து வாழ்ந்துமே
மனித குலத்தை நேசிப்போம்
மறம் வளர்த்து வாழவும்
அன்னை பூமியை வாசிப்போம்!
குழந்தைப் பாடல்
கலைஞன் என்ற பெயரிலே
கல்லை வணங்க வைத்திடும்
அரிய கலையைச் செய்திடும்
அழகு சிற்பி நான் தானே!
அன்பு மழையில் நனைந்தாலே
அழகு சிலையும் பிறந்திடும்
கனவு கண்டு வடித்திடும்
சிலையும் நனவா கிடும்!
வலிகள் யாவும் புன்னகை
அதற்கு உளிகலுமே பேரிகை
களிபொங்கும் வாழ்விலே
கலையும் நிலைத்து நிற்குமே!
கண் திறந்த பின்னரே
சிலையின் அழகு சிரித்திடும்
பொன்ன கையும் இன்றியே
புன்னகையும் பிறந்திடும்!
கல்லும் சிலையான பின்
கண்டு வணங்கி சிரிக்கிறேன்
மெல்ல மெல்ல சிற்பி நான்
சிலைகள் கண்டு ரசிக்கிறேன்!
கல்லை வணங்க வைத்திடும்
அரிய கலையைச் செய்திடும்
அழகு சிற்பி நான் தானே!
அன்பு மழையில் நனைந்தாலே
அழகு சிலையும் பிறந்திடும்
கனவு கண்டு வடித்திடும்
சிலையும் நனவா கிடும்!
வலிகள் யாவும் புன்னகை
அதற்கு உளிகலுமே பேரிகை
களிபொங்கும் வாழ்விலே
கலையும் நிலைத்து நிற்குமே!
கண் திறந்த பின்னரே
சிலையின் அழகு சிரித்திடும்
பொன்ன கையும் இன்றியே
புன்னகையும் பிறந்திடும்!
கல்லும் சிலையான பின்
கண்டு வணங்கி சிரிக்கிறேன்
மெல்ல மெல்ல சிற்பி நான்
சிலைகள் கண்டு ரசிக்கிறேன்!
Friday, October 29, 2010
புரிசை கூத்துத் திருவிழா-2010
புரிசை கூத்துத் திருவிழா-2010
கொம்பிலே பழம் பழுத்துத்
தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம் மயங்கி
பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம் போட்டு
ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திகிட்டுப் பாடுறதும்
கலை..கலை..கலை!
பட்டுக்கோட்டையார்.
மனித சமுதாயத்தின் கூட்டு முயற்சியாகப் பரிணமித்த நாட்டுப்புறக் கலைகள் பழமையின்,பண்பாட்டின் சின்னமாக விளங்கி மனித குலத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்குகிறது.பல்வேறு நாட்டுப்புறக் கலைவடிவங்களில் இன்னமும் கிராமங்கள் தோறும் வாழவைத்துக் கொண்டிருக்கும் கூத்துக் கலைக்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ளது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையில் இருக்கும் புரிசை எனும் கிராமம் ஆகும்.
கூத்துக் கலையை உலகத்தின் பல முனைகளுக்கு சென்று சொல்லியும்,நடத்தியும் காட்டி இக்கலைக்குப் பெருமை சேர்த்த புரிசை கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவாக அக்டோபர்22,23,24-2010 ஆகிய 3 நாட்களும் புரிசை மண்ணில் கலை வாசம் மணக்க மண் வாசம் மாறிய நாட்களாகும்.ஆண்டு தோறும் நடக்கும் இக்கூத்துத் திருவிழாவில் அந்நிய நாட்டினர்,திரைக் கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பல்வேறு கூத்து மன்றங்கள்,குழந்தைகள் முதல் அறிஞர்கள் வரை கலந்து கொண்டு சீரிளமையாக இவ்விழாவை சிறப்பித்து வருகின்றனர்.விழா எனும் திறந்த வாசல் வழியே தான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும்.கலைகளின் வளர்ச்சிக்கே விழாக்கள் தான் மூல காரணம் எனும் தாகூரின் வார்த்தைகள் கூத்துக்கலை நிகழ்த்தும் புரிசை மண்ணுக்குப் பொருத்தமானதே!
வைகறை இசைக்குழுவின் கிராமிய மணம் கமழும் பாடல்களோடு தொடங்கிய நிகழ்வு 3 நாட்களும் பல்வேறு நாடகங்களின் களமானது.சத்யலீலா,கைசிகபுராணம்,கி.ரா.கொழம்பு,லவ் பண்ணுங்கோ சார்,அனுமன் தூது,அரவான் களப்பலி,குதிரைமுட்டை,சென்னைக்கலைக்குழுவின் கொக்கரிப்பு,கோவில்பட்டி மணல் மகுடி நாடகக்குழுவின் மிருகவிதூஷகம்,சுந்தரிகல்யாணமெனும் கூத்துக்களும்,நவீன,வீதி நாடகங்களும்,மக்கள் திரளை கலக்கவும்,சிரிக்கவும் வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.
பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் விளக்கெண்ணெய் தடவிய மரக்கம்பத்தில் சிறுவர் முதல் இளைஞர்கள் வரையிலும் ஏறி உச்சத்தில் ஆடிய ஆட்டங்கள் அனைவரையும் அசரவைத்தது.கயிற்றில் நடந்து செல்லும் சாகஸத்திலும் இந்த சாகஸம் சாதனை என்றே சொல்லலாம்.மல்லர்கம்பத்தில் ஏறிவிளையாடிய அந்தக் கண்மணிகளைப் பாராட்டியேயாக வேண்டும்.லிம்போகேசவனின் தீ நடனமும்,நாலு கால் நடனமும் நிகழ்ச்சிக்குச் சூடேற்றியது.
கோயிலுக்கான குறியீடாக விழாக்கள் இருந்தன என்றால் கூத்துக்கலையின் வளர்ப்புப் பண்ணையாக புரிசை விளங்குகிறது எனலாம்.சிறுவர் முதல் பெரியவர்கள்,பேராசிரியர்கள்,படித்தவர்கள்,படிக்காதவர்களென அனைவருக்கும் கூத்துக்கலை சொல்லித்தரும் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் படித்து வளர்ந்து வரும் கலைஞர்கள் ஏராளம்.நெஞ்சை அள்ளி நெகிழ்ச்சியூட்டிய இவ்விழாவில் கூத்தோடு கரைந்துபோன மூத்த தெருக்கூத்துக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கூத்துக்கலையை உயர்த்திப் பிடித்திருக்கிறது புரிசை மண்!இதோடன்றி சங்கீத நாடக அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற கலைஞர்கள் மு.பழனி,நெல்லை மணிகண்டன் ஆகியோரையும் பாராட்டி கெளரவித்தது.
உலகமயம் எந்த நாட்டுக்கும் பொன்னாபரணமல்ல.அலுமினியப் பிச்சைப் பாத்திரம் தான் என்பதை ஓங்கி அறைந்தன நாடகங்கள்.இந்திய மண்ணுக்கான எழில் வளம்,கலை வளம்,இயற்கை மற்றும் செல்வ வளங்களையும்சுண்டி இழுக்கும்,சுரண்டும் கொள்கையாகவே இருக்கிறது என்பதையும்,அதற்கு அகில உலக முதலாளிகள் சங்கம் எடுபிடியாகி தேசத்திற்கு செய்யும் துரோகம் பாமர மக்களையும் சிந்திக்க வைத்தது.உலகமயத்திற்கு எதிராக மக்களின் ஆற்றலை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தையும் நெத்தியடியாகச் சொன்னது கொக்கரிப்பு!மதங்கள் எதுவும் மனிதர்களுக்குச் சோறு போடாது என்பதை சத்யலீலா நாடகமும்,தாய் மண் அழிந்து வருவதை எச்சரித்துச் சொன்ன மிருக விதூஷகம் தேசத்தின் சுதந்திரக்காற்றுக்கு வந்த ஆபத்தினை அழுத்தமாய்ப் பதிய வைத்தது.கோயில் விழாக்களில் முழங்கி வந்த கலைகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியவரும் அதை நாடறியச் செய்தவருமான கலவாணர் என்.எஸ்.கே வழியில் சமூகத்திற்கான நாடகங்களை மக்களுக்குச் சொல்லி சிந்திக்க வைக்கும் புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்,மற்றும்தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கலாச்சார,பண்பாட்டு ஒருமைப்பாட்டுணர்வைக் கூத்துகலை மூலம் மனித குலத்துக்குச் சொல்லும் புரிசை மண்ணில் கூத்துக்கலை கற்க அனைவருக்கும் வாய்ப்புள்ளதை இன்னும் அதிகம் பேர் அறியாமலே இருக்கிறார்கள் என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது .3 நாட்களும் கலைத்தவத்தோடு இருந்த புரிசை மண் சுந்தரி கல்யாணத்தை முடித்தே தவத்தைக் கலைத்துக் கொண்டது.இந்த 3 நாள் கூத்து விழா கற்றுத்தந்ததும், சொல்லித்தந்ததும் ஏராளம்..ஏராளம்!பழமையின் அடிச்சுவட்டிலிருந்து பூட்ஸ் கால்கள் வரையிலும் கற்றுக்கொள்ளவேண்டிய நாகரீகங்களும்,அடவுகளும்,அதிசயங்களும் நம் அனைவரின் மூளையிலும் இன்னும் பிராண்டிக் கொண்டே இருக்கின்றன.விழா குறித்து சுபோ ஜெயம் சொல்வதற்கு முன் இக்கூத்து விழாவை ஆண்டு தோறும் சாத்தியமாக்கிவரும் கூத்து இயக்கவாதிகளும் கலஞர்களுமான புரிசை கண்ணப்பசம்பந்தன்,கண்ணப்ப காசி,சங்கர் ஆகியோரின் பெரும் பங்கை மறக்க முடியாது.பாராட்டியேயாக வேண்டும்.
கூத்துகலைக்கோர் குற்றாலமாக இருக்கும் புரிசை மண்ணில் ஆண்டு தோறும் நடக்கும் நீர்வீழ்ச்சித்திருவிழாவில் எங்கிருந்தும் கலைப்பறைவைகள் வந்து,தங்கி,சிறகு விரித்து ஆடும் நடனங்களும்,நாட்டியங்களும்,அடவுகளும் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும் தான்!இறுதியாக..
“கூத்துத் தவத்தில்-இவர்கள்
காத்திரமானவர்கள்-புரிசை இவர்களை
அடைகாத்து வைத்திருக்கிறது,
கனவை நனவாக்கும் புரிசை மண்ணுக்கு
நாமும் கலைஞர்கள் அனைவரும் தோள் கொடுப்போம்!”
கூத்துப் பல்கலைக்கழகம் ஒன்று புரிசையில் துவக்க தமிழக அரசை வலியுறுத்திக் கோரிக்கையும் வைப்போம்!
.

Monday, October 25, 2010
ஹைக்கூ
ஊர்ந்து சென்று
உயிர் வளர்த்தது
வேர்.
தாரை தப்பட்டையுடன்
பூமிக்கு வந்தது
மழை.
காய்தல் தீது
நனைதல் நன்று
மீன் வலை.
எலிகள் காத்திருந்தன
அறுவடை வயலெங்கும்
வலைகள்.
உயிர்க்கருவுக்கு
எடுத்தனர் விழா
வளை காப்பு.
இழையில் பின்னியது
குடியிருக்கும் வீடு
சிலந்தி.
வானத்து இடிமுழக்கம்
ஒன்று சேர்ந்து கேட்டன
திசைகள்.
மத்தாப்பு ஒளியில்
நனைந்து கொண்டிருக்கிறது
காதல்.
வற்றாத ஜீவநதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு.
குழைந்தைக்கு இனித்தது
வான் நிலா
தேன் பலா.
முள் தைத்தும்
வலிக்காமல் ஓடுகிறது
நதி.
முள்ளோடு
வாழ்கிறது
மீன்.
உயிர் வளர்த்தது
வேர்.
தாரை தப்பட்டையுடன்
பூமிக்கு வந்தது
மழை.
காய்தல் தீது
நனைதல் நன்று
மீன் வலை.
எலிகள் காத்திருந்தன
அறுவடை வயலெங்கும்
வலைகள்.
உயிர்க்கருவுக்கு
எடுத்தனர் விழா
வளை காப்பு.
இழையில் பின்னியது
குடியிருக்கும் வீடு
சிலந்தி.
வானத்து இடிமுழக்கம்
ஒன்று சேர்ந்து கேட்டன
திசைகள்.
மத்தாப்பு ஒளியில்
நனைந்து கொண்டிருக்கிறது
காதல்.
வற்றாத ஜீவநதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு.
குழைந்தைக்கு இனித்தது
வான் நிலா
தேன் பலா.
முள் தைத்தும்
வலிக்காமல் ஓடுகிறது
நதி.
முள்ளோடு
வாழ்கிறது
மீன்.
Sunday, October 24, 2010
புரிசைகூத்து2010-விழா
செய்யாறு,அக்டோபர்24,புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை
தெருக்கூத்து மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூர்,இணைந்து
நடத்திய தெருக்கூத்துவிழா 3நாள் நிகழ்வு22.10.2010 அன்று
தொடங்கியது.இதில் கலைமாமணீ கண்ணப்பதம்பிரான் ஏழாம் ஆண்டு நினைவு
நாடகக்கலைவிழா, கலைமாமணி கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கும் விழா மற்றும்சங்கீத நாடக அகாதமியின் யுவபுரஸ்கர்
விருதுபெற்றவர்களை சிறப்பிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
ஆர்.லட்சுமணன் ஊரட்சிமன்ற தலைவர் புரிசை தலைமையில் நடைபெற்றது.நிகழ்வு
வைகறை இசைக்குழுவின் கிராமப்புறப் பாடல் நிகழ்வுடன்
துவங்கியது.கே.எஸ்.கருணாபிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.வாழ்த்தியும்
நிகழ்வை ஒருங்கிணைத்தும் ஆர்.லோகநாதன்,செய்யாறு ஐடிஐ தாளாளர் அவர்கள்
பேசினார்.சத்ய லீலா,மல்லர் கம்பம்,கைசிக புராணம்,கி.ரா.கொழம்பு,அனுமன்
தூது அரவாண் களப்பலி ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. மறுநாள் 23.10.2010அன்று
பிற்பகல் தெருக்கூத்து முக ஒப்பனைப் பயிற்சி முகாம்
நடைபெற்றது.இரவில்சென்னை கலைக்குழுவின் கொக்கரிப்பு,லவ் பண்ணுங்க
சார்,குதிரைமுட்டை,முருகபூபதியின் மிருகவிதூஷகம்,ஆகிய
நாடகங்களும்,தீநடனம்,நாலுகால் நடனம் ,அரவாண் களப்பலி நாடகமும்
நடைபெற்றது.மற்றும் கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருதுமூத்த
தெருக்கூத்துக்கலைஞரும்,கலைமாமணி விருது பெற்றவருமான பாவலர் ஓம்
முத்துமாரி அவர்களுக்கு பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழ்த்துறை
,சென்னைப்பல்கலைக்கழகம்,அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மு.பழனி,நெல்லைமணிகண்டன் ஆகியோர் சங்கீத நாடக அகாதமியின் யுவ புரஸ்கார்
விருது பெற்றதையொட்டிப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.விருது பெற்றவர்களை
பாராட்டி, பேராசிரியர் செ.ரவீந்திரன் மேனாள்
இலக்கியத்துறைத்தலைவர்,தில்லி பல்கலைக்கழகம்,நாடக
இயக்குனர்பிரளயன்,எழுத்தாளர் ஆரிசன் மாவட்ட செயலாளர் தமுஎகச திருவண்ணாமலை
ஆகியோர் பேசினர். இன்று இரவு மூன்றாம் நாள் நிகழ்வாக சுந்தரி கல்யாணம்
புதிய கூத்து அரங்கேற்றம் நடந்தது.நிகழ்வு ஏற்பாடுகளை
கண்ணப்பகாசி,மற்றும் கலைமாமணி கண்ணப்பசம்பந்தன்,சங்கர் ஆகியோர்
செய்திருந்தனர்.ஸ்ரீராம் நடராசன் இறுதியில் நன்றி கூறினார்.
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கலைமாமணி கண்ணப்பதம்பிரான் வாழ்நாள் சாதனையாள்ர் விருது பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழிலக்கியத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம் வழங்கியபோது எடுத்த படம்.
தெருக்கூத்து மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூர்,இணைந்து
நடத்திய தெருக்கூத்துவிழா 3நாள் நிகழ்வு22.10.2010 அன்று
தொடங்கியது.இதில் கலைமாமணீ கண்ணப்பதம்பிரான் ஏழாம் ஆண்டு நினைவு
நாடகக்கலைவிழா, கலைமாமணி கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கும் விழா மற்றும்சங்கீத நாடக அகாதமியின் யுவபுரஸ்கர்
விருதுபெற்றவர்களை சிறப்பிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
ஆர்.லட்சுமணன் ஊரட்சிமன்ற தலைவர் புரிசை தலைமையில் நடைபெற்றது.நிகழ்வு
வைகறை இசைக்குழுவின் கிராமப்புறப் பாடல் நிகழ்வுடன்
துவங்கியது.கே.எஸ்.கருணாபிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.வாழ்த்தியும்
நிகழ்வை ஒருங்கிணைத்தும் ஆர்.லோகநாதன்,செய்யாறு ஐடிஐ தாளாளர் அவர்கள்
பேசினார்.சத்ய லீலா,மல்லர் கம்பம்,கைசிக புராணம்,கி.ரா.கொழம்பு,அனுமன்
தூது அரவாண் களப்பலி ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. மறுநாள் 23.10.2010அன்று
பிற்பகல் தெருக்கூத்து முக ஒப்பனைப் பயிற்சி முகாம்
நடைபெற்றது.இரவில்சென்னை கலைக்குழுவின் கொக்கரிப்பு,லவ் பண்ணுங்க
சார்,குதிரைமுட்டை,முருகபூபதியி
நாடகங்களும்,தீநடனம்,நாலுகால் நடனம் ,அரவாண் களப்பலி நாடகமும்
நடைபெற்றது.மற்றும் கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருதுமூத்த
தெருக்கூத்துக்கலைஞரும்,கலைமா
முத்துமாரி அவர்களுக்கு பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழ்த்துறை
,சென்னைப்பல்கலைக்கழகம்,அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மு.பழனி,நெல்லைமணிகண்டன் ஆகியோர் சங்கீத நாடக அகாதமியின் யுவ புரஸ்கார்
விருது பெற்றதையொட்டிப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.விருது பெற்றவர்களை
பாராட்டி, பேராசிரியர் செ.ரவீந்திரன் மேனாள்
இலக்கியத்துறைத்தலைவர்,தில்லி பல்கலைக்கழகம்,நாடக
இயக்குனர்பிரளயன்,எழுத்தாளர் ஆரிசன் மாவட்ட செயலாளர் தமுஎகச திருவண்ணாமலை
ஆகியோர் பேசினர். இன்று இரவு மூன்றாம் நாள் நிகழ்வாக சுந்தரி கல்யாணம்
புதிய கூத்து அரங்கேற்றம் நடந்தது.நிகழ்வு ஏற்பாடுகளை
கண்ணப்பகாசி,மற்றும் கலைமாமணி கண்ணப்பசம்பந்தன்,சங்கர் ஆகியோர்
செய்திருந்தனர்.ஸ்ரீராம் நடராசன் இறுதியில் நன்றி கூறினார்.
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கலைமாமணி கண்ணப்பதம்பிரான் வாழ்நாள் சாதனையாள்ர் விருது பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழிலக்கியத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம் வழங்கியபோது எடுத்த படம்.
Thursday, October 21, 2010
கவிதை
காதுகளுக்கு
அதிர்வுகளைத தரும்
செல்பேசிகளுக்கு..
களைப்பு நீங்க-
தேவையாய் இருக்கிறது..
எப்போதும்..
ரீசார்ஜ்!
அதிர்வுகளைத தரும்
செல்பேசிகளுக்கு..
களைப்பு நீங்க-
தேவையாய் இருக்கிறது..
எப்போதும்..
ரீசார்ஜ்!
ஹைக்கூ
நடந்தான்
சர்க்கரை வியாதிக்காரன்
ரோடு முழுக்க எறும்புகள்!
இனனும் அம்மாவால்
சுட்டுத்தரமுடியாத தோசை
நிலா!
நட்சத்திரங்கள்
பூமிக்கு வர விருப்பம்
இலவச மனைப் பட்டா!
விரிந்த உலகம்
கைக்குள் சுருங்கியது
செல்பேசி!
தவம் கலைத்தன
கழுதைகள்
பசையோடு சுவரொட்டிகள்!
சர்க்கரை வியாதிக்காரன்
ரோடு முழுக்க எறும்புகள்!
இனனும் அம்மாவால்
சுட்டுத்தரமுடியாத தோசை
நிலா!
நட்சத்திரங்கள்
பூமிக்கு வர விருப்பம்
இலவச மனைப் பட்டா!
விரிந்த உலகம்
கைக்குள் சுருங்கியது
செல்பேசி!
தவம் கலைத்தன
கழுதைகள்
பசையோடு சுவரொட்டிகள்!
சும்மா பாடுங்க..
உன் கண்கள் காந்தத் தொழிற்சாலை
கனவுகள் வெல்லும் சிறைச்சாலை
என் கண்கள் உனக்கும் பூமாலை
நனவுகள் மலர்ந்திடும் வான்சோலை!
உன் வரவில் இருட்டும் பதுங்கிவிடும்
கண்ணொளி யும் வழியைக் காட்டிவிடும்
கார்முகிலை மினனல் வெட்டிவிடும்
மழை பூமியை வறட்சியும் வாட்டிவிடும்!
பிறந்த மேனியில் உதடுகள் கிள்ளும்
புவியீர்ப்பு விசையில் மனிதம் துள்ளும்
உறைந்துபோக நினைவலை சொல்லும்
என்னை உந்தன் உயிரும் மெல்லும்!
காமன் கையில் கரும்பு வில்லும்
கண்ணயர்ந்து காதல் சொல்லும்
மாமன் எந்தன் மனதில் துள்ளும்
மலர்க்கணையும் உன்னை வெல்லும்!
சுற்றம் சூழ்ந்து திசைவழி காட்ட
சூடிக்கொள்ள பூமணம் வீசும்
குற்றம் புரிய கன்னம் ஏங்க
கூரீட்டியாய் கண்கள் மாறும்!
வியர்வை நீரும் உப்பாய்க் கரையும்
விரும்பிய வரையும் கடலும் சுரக்கும்
கனவுத்தேரும் ஊர்வலம் போகும்
மனது முழுக்க அன்பில் தோயும்!
வேதம் நான்கும் விலாசம் கேட்கும்
வேள்விகள் தொடர வானும் கரையும்
மதங்கள் யாவும் மாசாய்ப் போகும்
கேள்வியின் பதிலும் தூசாய் மாறும்!
கனவுகள் வெல்லும் சிறைச்சாலை
என் கண்கள் உனக்கும் பூமாலை
நனவுகள் மலர்ந்திடும் வான்சோலை!
உன் வரவில் இருட்டும் பதுங்கிவிடும்
கண்ணொளி யும் வழியைக் காட்டிவிடும்
கார்முகிலை மினனல் வெட்டிவிடும்
மழை பூமியை வறட்சியும் வாட்டிவிடும்!
பிறந்த மேனியில் உதடுகள் கிள்ளும்
புவியீர்ப்பு விசையில் மனிதம் துள்ளும்
உறைந்துபோக நினைவலை சொல்லும்
என்னை உந்தன் உயிரும் மெல்லும்!
காமன் கையில் கரும்பு வில்லும்
கண்ணயர்ந்து காதல் சொல்லும்
மாமன் எந்தன் மனதில் துள்ளும்
மலர்க்கணையும் உன்னை வெல்லும்!
சுற்றம் சூழ்ந்து திசைவழி காட்ட
சூடிக்கொள்ள பூமணம் வீசும்
குற்றம் புரிய கன்னம் ஏங்க
கூரீட்டியாய் கண்கள் மாறும்!
வியர்வை நீரும் உப்பாய்க் கரையும்
விரும்பிய வரையும் கடலும் சுரக்கும்
கனவுத்தேரும் ஊர்வலம் போகும்
மனது முழுக்க அன்பில் தோயும்!
வேதம் நான்கும் விலாசம் கேட்கும்
வேள்விகள் தொடர வானும் கரையும்
மதங்கள் யாவும் மாசாய்ப் போகும்
கேள்வியின் பதிலும் தூசாய் மாறும்!
Wednesday, October 20, 2010
குழந்தைப் பாடல்கள்
வெள்ளை நிறத்தில் பூனைக்குட்டி
கள்ளமின்றி வந்தது
பள்ளம் மேடு பார்த்துமே
உள்ளம் தொட்டு நின்றது!
தோட்டத்திலே பூக்களின்
செடிகள் அழகை ரசித்தது
மேயும் எலிகள் பார்த்ததும்
கவலை கொண்டு அழுதது!
வலைகள் தோண்டி வாழ்ந்திடும்
எலிகள் கண்டு சினந்தது
கலைகள் வளர்த்த தோட்டத்தில்
கண்சிமிட்டி நின்றது!
உற்றுப் பார்த்த பூனையும்
சற்று தூரம் வந்தது
பட்டுப் பூச்சி அழகையும்
பார்த்து நின்று ரசித்தது!
சுவாசித்த சிறகுகளை
சுற்றி முற்றும் பார்த்தது
சூழ்ந்து நின்று ரசிக்கவும்
வீட்டு நாயை அழைத்தது
எலிகள் தொல்லை சொல்லியும்
பூனை அழுது வழிந்தது
நாயும் அதை நினைத்துமே
நல்ல வழி சொன்னது!
எலிகள் கண்டு பயப்படும்
பூனை என்ன பூனையோ
வெள்ளை நிறம் உனக்குமே
பாழும் நிறம் ஆனதோ!
எனக்கு ஒரு பூனையும்
நண்பனாக இருக்குது
அழைத்து வந்து நானுமே
எலிகள் ஒழித்து வெல்லுவேன்!
மியா.மியா..சொல்லியே
மேலத்தெருவுக்கு வந்தது
குரைக்கும் நாயின் மியாவைக்கேட்டு
பூனை அசந்து நின்றது!
கதையை விளக்கி சொன்னது
உணவுக் கதை அழைத்தது
பூக்கள் நிறைந்த தோட்டத்தை
புன்னகைத்துப் பார்த்தது!
பூவைப்போலும் தன் இனத்தை
புதுமையாகப் பார்த்தது!
நாயைப் பார்த்துப் புன்னகைத்து
நன்றி சொல்லி மகிழ்ந்தது!
தொல்லை தரும் எலிகளை
தோண்டி வலையில் தின்றது
வெள்ளைப் பூனை வலையிலே
வீழ்ந்து வாழ்வில் இணைந்தது!
கள்ளமின்றி வந்தது
பள்ளம் மேடு பார்த்துமே
உள்ளம் தொட்டு நின்றது!
தோட்டத்திலே பூக்களின்
செடிகள் அழகை ரசித்தது
மேயும் எலிகள் பார்த்ததும்
கவலை கொண்டு அழுதது!
வலைகள் தோண்டி வாழ்ந்திடும்
எலிகள் கண்டு சினந்தது
கலைகள் வளர்த்த தோட்டத்தில்
கண்சிமிட்டி நின்றது!
உற்றுப் பார்த்த பூனையும்
சற்று தூரம் வந்தது
பட்டுப் பூச்சி அழகையும்
பார்த்து நின்று ரசித்தது!
சுவாசித்த சிறகுகளை
சுற்றி முற்றும் பார்த்தது
சூழ்ந்து நின்று ரசிக்கவும்
வீட்டு நாயை அழைத்தது
எலிகள் தொல்லை சொல்லியும்
பூனை அழுது வழிந்தது
நாயும் அதை நினைத்துமே
நல்ல வழி சொன்னது!
எலிகள் கண்டு பயப்படும்
பூனை என்ன பூனையோ
வெள்ளை நிறம் உனக்குமே
பாழும் நிறம் ஆனதோ!
எனக்கு ஒரு பூனையும்
நண்பனாக இருக்குது
அழைத்து வந்து நானுமே
எலிகள் ஒழித்து வெல்லுவேன்!
மியா.மியா..சொல்லியே
மேலத்தெருவுக்கு வந்தது
குரைக்கும் நாயின் மியாவைக்கேட்டு
பூனை அசந்து நின்றது!
கதையை விளக்கி சொன்னது
உணவுக் கதை அழைத்தது
பூக்கள் நிறைந்த தோட்டத்தை
புன்னகைத்துப் பார்த்தது!
பூவைப்போலும் தன் இனத்தை
புதுமையாகப் பார்த்தது!
நாயைப் பார்த்துப் புன்னகைத்து
நன்றி சொல்லி மகிழ்ந்தது!
தொல்லை தரும் எலிகளை
தோண்டி வலையில் தின்றது
வெள்ளைப் பூனை வலையிலே
வீழ்ந்து வாழ்வில் இணைந்தது!
Tuesday, October 19, 2010
கவிதை
டவுசர் கிழிந்து
டயர் வண்டி ஓட்டியபோது
என்னோடு வரும்
நண்பேன்டாக்களுக்கும்
நட்பின் ஆழம் புரிந்திருந்தது
பால்ய பருவத்திலும்!
பங்கிட்டுக்கொள்வதில்
எப்போதும் பிரச்னை
எழுவதே இல்லை.
பலகையில் எழுதும் பலபமும்
நோட்டில் எழுத பென்சிலும்
நொடியில் வாங்கித்தரும்
வழுக்கை மண்டை வாத்தியாரை
இப்போதும் நினைவிருக்கிறது!
வரதராஜன் என்ற பெயரும்
மனிதில் பதிந்தவையே!
வெள்ளிக்கிழமை தோறும்
விரதம் இருப்பார்.
வித்தியாசம் தெரியாமல்
அடித்தும் தொலைப்பார்
சாதி இரண்டொழிய
வேறில்லை என்பார்.
அடித்த அடி வலிக்க
நாங்கள் அவரிடமே
சூட்டோடு கேட்டுவிட்டோம்
நீங்கள் எந்த ஜாதி சார்?
அடிக்கும் ஜாதியா?
அடிக்காத ஜாதியா?
வழுக்கைமண்டை வாத்தியார்
மண்டையில் பிரம்பு
பிராண்டிக்கொண்டிருந்தது!
டயர் வண்டி ஓட்டியபோது
என்னோடு வரும்
நண்பேன்டாக்களுக்கும்
நட்பின் ஆழம் புரிந்திருந்தது
பால்ய பருவத்திலும்!
பங்கிட்டுக்கொள்வதில்
எப்போதும் பிரச்னை
எழுவதே இல்லை.
பலகையில் எழுதும் பலபமும்
நோட்டில் எழுத பென்சிலும்
நொடியில் வாங்கித்தரும்
வழுக்கை மண்டை வாத்தியாரை
இப்போதும் நினைவிருக்கிறது!
வரதராஜன் என்ற பெயரும்
மனிதில் பதிந்தவையே!
வெள்ளிக்கிழமை தோறும்
விரதம் இருப்பார்.
வித்தியாசம் தெரியாமல்
அடித்தும் தொலைப்பார்
சாதி இரண்டொழிய
வேறில்லை என்பார்.
அடித்த அடி வலிக்க
நாங்கள் அவரிடமே
சூட்டோடு கேட்டுவிட்டோம்
நீங்கள் எந்த ஜாதி சார்?
அடிக்கும் ஜாதியா?
அடிக்காத ஜாதியா?
வழுக்கைமண்டை வாத்தியார்
மண்டையில் பிரம்பு
பிராண்டிக்கொண்டிருந்தது!
Saturday, October 16, 2010
முகநூலில் எழுதியது
NotesMy Notes
- By Aari Aarison · Thursday, October 7, 2010
தண்டல்காரனிடம்
தடியாட்சியும்..
முடமானவனிடம்
முடியாட்சியும்..
குடிப்பவனிடம்
குடியாட்சியும்..
இருக்க வேண்டிக் கொண்டனர்
டாஸ்மாக் கடைக்கு வெளியே
கியூவில் நிற்கும்
நுகரும் “புட்டி”ஸ்டுகள்!
- By Aari Aarison · Thursday, October 7, 2010ஆமை ஒன்னு வீட்டுக்குள்ளே
வந்துப் புட்டாலே
விளங்காது என்று சொல்லி
வீட்டை விற்பாரே!
குடிபோதையிலே எத்தனையோ
ஆடவரும் தான்
வீட்டுக்குள்ளே ஆமைகளாய்
வாழுகின்றாரே!
சேரிமனிதன் வீட்டுக்குள்ளே
வந்துப்புட்டாலே
தீட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்
என்று சொல்வாரே!
தீட்டுப் பொண்ணு வந்து
கழுவும் பாத்திரத்திலே
அரிசிச் சோறும் வெந்துபோகும்
பண்ணைப் புரத்திலே!
சேரிக்கொறத்தி வந்துப்புட்ட... - By Aari Aarison · Thursday, October 7, 2010ஹலோ சொல்லி
அழைத்ததும்-
வணக்கம் சொன்னாய்1
தமிழின் சிகரத்துக்கு
தலைசாய்த்து வணங்கி..
வாழ்த்துச் சொன்னேன்!
நன்றி தெரிவித்தாய்.
தொடரட்டும் பாராட்டுக்களின்
வேள்வி என்றதும்-
நீ..உன்னை
அடுத்த பாராட்டுக்கு
ஆயத்தப்படுத்திக் கொண்டாய்!
தொடர்வண்டிபோல் செல்லும்
மகிழ்ச்சியின் தொடர் அடுக்குகளுக்கு
சாதனையின் மீட்சி மட்டுமே
சவாலாக்கப்படுகிறது
தமிழ் நதிகளின் நீரூற்றுகளுக்கு!
செதுக்... - By Aari Aarison · Thursday, October 7, 2010
செல்லப்பிள்ளை..சின்னப்பிள்ளை
பையைப் பாரடா!
சேதி சொல்லும் உலகமெல்லாம்
உன் கைக்குள் தானடா!
கள்ளமின்றி மூளையெல்லாம்
நமக்கு தானடா!அதை
கலப்படமா மாத்திப்புட்டான்
“வெள்ளை” ஆளுடா!
விவரத்தோடு வேட்டு வைக்க
கெளம்பி வந்துட்டான்-அவன்
உலகமயம் என்று சொல்லி
ஊர நாட்டக் கலக்குறான்
வெள்ளக்காரன் நாத்தம் போயி
நாடு மணந்தது-இப்ப
தொல்லக்காரனாக வந்து
தொழிலத் தொடங்குறான்!
இத நாடு செழி...
- By Aari Aarison · Thursday, September 30, 2010தாயின் கருப்பை
கிழிந்து போக சிரிக்கிறது
உலகமயம். - By Aari Aarison · Thursday, September 30, 2010புழுக்கத்தில் மனிதர்கள்..
காற்றைக் களவாடி பயணிக்கிறது-
மதத் தேர். - By Aari Aarison · Thursday, September 30, 2010உரசி மீட்டியதும்-
சுடர்விட்டு சிரித்தது.
வீசி எறிந்ததில் தீயாகி..
எரிமலையாய்த் தொடர்கிறது-
இன்னும்!
உணர்ச்சியின்..
பள்ளத்தாக்கெங்கும்..
அரசியல் வேர்களில்-
தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது..
சரம் சரமாய்-
அணுகுண்டின்..
அரிசிக் குப்பிகள்!
மலையின் உச்சியையும்-
தொடமுடியாத அளவிற்கு! - By Aari Aarison · Sunday, September 26, 2010ரதங்களைத் தேடி
ஓடுகின்றன மதங்கள்...
இஸங்களோடு-
விதைக்கப்படுகின்றன..
நச்சு விதைகள்!
வதங்களைத்தேடி
வாழ்வை முடித்துக்கொள்ள..
தீர்மானிக்கிறது..
’முதலின்’ பயணம்.
இடிகள் வீழ்ந்து கருகிய பூமியில்-
தொலைந்து போயின..
வாழ்விடங்கள்..
மனிதகுலம் இன்னும் ..புதிய விடியலுக்கான
தேடிக்கொண்டிருக்கிறது
‘தொழிலின்’ கஜானவை..! - By Aari Aarison · Sunday, September 19, 2010சின்னத்திரையில்..
சீரியசாய் சொல்லித் தரப்படுகிறது
அழுகையினை!
மாமியார் மருமகள்..
புனிதங்கெட்டு-
அப்பா அம்மா..
அனதையாய்த் திரிவதும்..
அக்கா தங்கை..
அழுக்காகி அலைவதும்-
அண்ணன் தம்பி
அசிங்கமாய்த் திரிவதும்..
கொழுந்தன் கொழுந்தி-
கொழுப்பேறி அலைவதும்..
வீடு முழுக்க..
விழுங்கிக்கொள்ள முடிகிறது-
சின்னத்திரையால்!
சோகமோ துக்கமோ..
இன்பமோ துன்பமோ..
ஆறாக ஓடி..
உப்புக்கண்ணீர் முழுக...
9 ResultsNotes Help
Subscribe to:
Posts (Atom)