Popular Posts

Sunday, November 7, 2010

திண்ணை-81 :புகைப்படங்கள்

இளம் திரை இயக்குனர் பிரியஷரண் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வந்தவாசியைச் சேர்ந்த திருமிகு.பொன்.விஜயகுமார் அவர்களின் புகைப்படங்கள்..பதிவு

திண்ணை-81(07.11.2010 ஞாயிறு)

பாராட்டை ஏற்றுக்கொண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு.பொன்.விஜயகுமார் பேசுகையில்...
                                            நான் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையில் நான் மாடு மேய்க்கப் போக வேண்டும்.நான் தேசூர் அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி யில் இரண்டாவது மதிப்பெண் பெற்றுத் தேறினேன்.எனக்கு கணித ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.இருந்தாலும் அப்போது எனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி இல்லை.செய்யாறு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.இந்நிலையில் வந்தவாசிக்குச் சென்று டைப் (தட்டச்சு)கற்றுக்கொள்ள வீட்டில் முடிவு செய்தனர்.அதற்காக ஒரு சைக்கிள் வாங்க பெற்றோர் மிகவும் சிரமப் பட்டனர்.அந்த நேரத்தில் தான் எனக்கு திண்டிவனம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல் மாணவராக சேர்த்துக்கொள்ளும் உத்திரவு வந்தது.பெற்றோர்களின் கூலி மூலமும் கடனிலும்  ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.முதன்முதலில் எனக்கு மகமாயிதிருமணி என்னும் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் துவக்கினேன்.கொரக்கோட்டை,தெள்ளாறு,மீசநல்லூர்,டி.மாம்பட்டு,கொண்டையாங்குப்பம்,
பொன்னூர்,கொடியாலம்,என பல்வேறு பள்ளிகளில் பணி செய்து இன்று கூத்தம்பட்டு நடுநிலைப்  பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.நான் பணியாற்றி இடங்களில் எல்லாம் கிராம பொது மக்களும்,தலைவர்களும் அதிக அளவில் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.அவர்களுக்கெல்லாம் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.சில தலைவர்கள் என் பணியைப் பாராட்டி, பாராட்டுவிழாக்களும், பரிசும்,கடிதங்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.எனது உழைப்பும்,பணியும் வீண்போகவில்லை என்று நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது.2006ம் ஆண்டில் எனக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இந்த ஆண்டு(2009ம் ஆண்டுக்காண)தேசிய நல்லாசிரியர் விருதினை நான் டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கையால் விருது வாங்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்.என் வாழ்வில் மிகப் பெரும் சொர்க்கத்தைக் கண்ட உணர்வு ஏற்பட்டுள்ளது.ஒரு சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த விருது வாழ்க்கையில் நான் அடைய நினைத்த எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்ததாக நினைக்கிறேன்.என் பெற்றோர்களுக்கும்,இறைவனுக்கும் இதை காணிக்கையாக்கிக்கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.இத்மட்டுமின்றி எனது துணைவியார் திருமதி சி.பத்மாபாய் அவர்களும் நான் டெல்லியில் ஜனாதிபதியிடம் விருது வாங்கும் போது அவர்கள் தமிழகாரசின் நல்லாசிரியர் விருதை அதே05.09.2010அன்று சென்னையில் வாங்கினார்கள் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத்தருகிறது.நான் முடிந்த மட்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்,முடியவில்லையானால் சும்மா இருந்துவிடுவேன்.யாருக்கும் தொந்திரவு செய்யமாட்டேன்.என் பணியில் சற்று கடுமையாக இருப்பேன்.”நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” எனும் குறுந்தொகைப் பாடல் வரிகளில் என் நிஜத்தைத் தெரிந்து கொள்ளலாம் என சொல்லி முடிக்கும் போது திண்ணை வாசக நேச நெஞ்சங்களுக்கும் வறிய வாழ்வு சிகரம் தொட்டவெற்றியைப் போற்றிய தமுஎகச வின் திண்ணை நிகழ்வுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
நாமெல்லோரும் ஒண்ணு என்று பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டோடு,இது கற்றவர் நிறைந்த மண்ணு,கொற்றவரும் திரும்பிப்பார்த்து கேட்கவைக்கும் மண்ணு,கதை..கவி செய்யும் இலக்கிய ஆற்றல் நிரம்பிய மண் என வந்தவாசியைச் சொல்லாமல் இருக்க முடியாது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்,வந்தவாசி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-81 இலக்கிய நிகழ்வு இன்று காலை 11.00மணிக்கு காளி முனுசாமி செட்டியார் சத்திரம்,தேரடி,வந்தவாசியில் தோழர் ந.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
                 
                                 நிகழ்வு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு பொன்.விஜயகுமார் அவர்களுக்குப் பாராட்டும்,இளம் திரை இயக்குனர் பிரியஷரண் தன் திரை இயக்கம் குறித்த பகிர்வுகளுமாக நடைபெற்றது.முனைவர் ம.மஹாலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பூங்குயில்சிவகுமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

                    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.பொன்.விஜயகுமார் அவர்களைப் பாராட்டி பழ.சீனுவாசன்,முதல்வர் ஜோதி நிதி உதவிப் பள்ளி,தெள்ளாறு ,கவிஞர்.ஆரிசன்,தமுஎகச,மாவட்டசெயலாளர்,அ.அண்ணாமலை,மாவட்டப் பொருளாளர்,அ.ஜ.இஷாக்,ஜவுளி அதிபர் ஆகியோர் பேசினர்.நிகழ்வில் கிளை நிர்வாகிகள் இரா.சிவகுமார்,இர.இராமலிங்கம் மற்றும்திரு சக்திவேல்,உதவி தொடக்கக்கல்வி அலுவலர்,வந்தவாசி;பொன்னெழில்சந்திரன்,தலைமையாசிரியர்; ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் கிளை பொருளாளர் கி.உதயகுமார் நன்றி கூறினார்.