Popular Posts

Tuesday, December 28, 2010

உயிர்ப்பின் நிழலாக..

மூடுபனி முக்காடு போட்ட
மலைச்சிகரம்!

காடுகளில்..
வசிப்பிடங்களைத்தேடித்திரியும்-
விலங்கினங்கள்!

சலனமற்று ஓடும் நதியின்..
இயற்கை எழில் கொஞ்சும்
அழகு!

சலனத்தோடு குதித்திறங்கும்
அருவியின் அற்புதம்!

கண் இமைக்குள் சிக்காமல்-
தொடரும் அலைகளைத்
தயாரித்து அனுப்பி
சந்தோஷிக்கும்
கடல்!

தாலாட்டும் மேகத்தை..
தாரவாந்து போகாமல்-
பாதுகாத்தும்..
அடைகாத்தும்..
வைத்திருக்கும்-
வானம்!

மயங்கிப்போன..
எல்லாவற்றையும்-
உயிர்ப்பித்து-
ஆனந்தமாக்கும்..
சூரிய சூட்டின் சிரிப்பில்-
வசியமாகி..
குதுகலமாயிருக்கிறது..
குழந்தைகளைச் சுமக்கும்
வீடுகள்!

பனி படர்ந்த தேசத்துக்குள்..
உயிர்ப்பின் நிழலாக..
உலா வருகிறது
வெய்யில்!

Friday, December 17, 2010

ஹைக்கூ

*வாழ்வின் வெற்றியை
செதுக்கியது
சிக்கனம்.

*விளைநிலம்
வீசியெறிந்தனர் கத்திகள்
போர்மேகம்.

*கவலை மறந்து
கவிதை தீட்டினான்
தோட்டத்தில் மின்மினி.

*கத்தியில்லை ரத்தமில்லை
போரில் முதலீடானது
அன்பு.

*வேரின் அழுகையில்
துளிர்த்தது செடி
வறண்ட பூமி.

*இடி இடித்த மேகத்தோடு
பேசியது மின்னல்
வீரம்.

*வறண்ட பூமி
வீரத்தோடு புறப்பட்டது
மழை நீர்.

*”கத்தி” பேசியவனுக்கு
முதல் பரிசு
வீரம்.

*வரப்பு தகராறு
வாய் கிழிய சண்டையிட்டனர்
சகோதரிகள்.

Wednesday, December 8, 2010

திண்ணை-82,வேட்கையின் நிழல் நூல் வெளியீடு,காட்சிப்பதிவு

வந்தவாசியில் நடைபெற்ற கவிஞர் ஆரிசனின் வேட்கையின் நிழல் நூல் வெளியீட்டு காட்சிப்பதிவுகள்.

Wednesday, December 1, 2010

வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்

சீரழிந்து கிடக்கும் வந்தவாசி கோட்டை-காட்சிப்படங்கள்
null
null
null
null

வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்

வந்தவாசிப் போர் நினைவூட்டும் கல்வெட்டு
null
போர் குறித்த பெயர்ப்பலகை
null
சகதியும்,உறுத்தும் குப்பைகளோடு கோட்டை அகழி
null
null
null
null
null

திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு-சில படங்கள்.

null
null
null
null
null
null
null

திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு

 
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்...
திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்து
 
 

ஆசியன் அகாதெமி மருத்துவப் பயிற்சிப் பள்ளி வந்தவாசியில் தமுஎகச வின் திண்ணை 83 நிகழ்வு 30.11.2010 செவ்வாய் காலை நடைபெற்றது.இரா.சிவகுமார் தலைமைதாங்கினார்.வந்தவாசிப்போர் குறித்து வழக்கறிஞர் எல்.குமார்,அ.ஜ.இஷாக்,ஆரிசன்,பூங்குயில்சிவகுமார்,எம்.கோவிந்தராஜன் அகியோர் பேசினர்.
வழக்கறிஞர் எல்.குமார் பேசியதிலிருந்து...
                                              நம் வாழ்க்கையிலிருந்து வரலாற்றைப் பிரிக்க முடியாது.இதற்கு நாம் முன்னோர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும்,தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது,நாடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் யாவும் போர் குறித்து அதிகம் பேசுகிறது.பகவத்கீதையின் குருசேத்திரப்போரும் ,அசோக மன்னனின் கலிங்கத்துப்போரும் மனிதகுலத்துக்கும்,தனிமனிதனுக்கும் பாதை வகுத்துத்தந்தது எனலாம்.நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான மையப் புள்ளியாக வந்தவாசிப்போரைக் கருதலாம்.வாழ்க்கை வரலாறாக இருக்க வேண்டும்.ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் 1760ஜனவரி22ல் நடந்த வந்தவாசி சண்டையில் இங்கிலாந்துப் படை வெற்றி பெற லாலி,புஸ்ஸிஆகிய பிரஞ்சுப் படை தோற்கிறது.இந்த தோல்விக்கான காரணத்தால் லாலிக்கு பிரஞ்சு நாட்டில் தூக்கு தண்டணை விதிக்கப்படுகிறது என்பதே வந்தவாசிப் போராகும்.
  நன்றி நாவலாசிரியர் கா.பரிதா கூறினார்.