Popular Posts

Sunday, November 14, 2010

நூல் வெளியீடு-சில படங்கள்.

கவிஞர் ஆரிசனின்’வேட்கையின் நிழல்’ கவிதை நூல் வெளியீடு

 
 
கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’கவிதை நூலினை முனைவர் பாலரமணி,நிகழ்ச்சிநிர்வாகி,சென்னைத்தொலைக்காட்சி அவர்கள் வெளியிட கவிஞரும் எழுத்தாளருமான பெரணமல்லுர் சேகரன் பெற்றுக்கொள்கிறார்.

திண்ணை-82,கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ நூல் வெளியீடு

வந்தவாசி,நவம்பர்13.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-82 நிகழ்வு இன்று மாலை வந்தவாசி ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’நூல் வெளியீட்டு விழாவாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பூங்குயில் சிவகுமார் தலைமை தாங்கினார்.ந.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
          கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூலினை முனைவர் பாலரமணி,நிகழ்ச்சி நிர்வாகி சென்னைத்தொலைக்காட்சி அவர்கள் வெளியிட கவிஞரும்,எழுத்தாளருமான பெரணமல்லுர் சேகரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்தும், இக்கால இலக்கியம் குறித்தும் கவிஞர் ஜீவி மாநிலத்துனைத்தலைவர் தமுஎகச, பேசினார்.கவிஞரும் மா திரைப்பட உதவி இயக்குனரும், மின் இலக்கியப்பூங்கா மாநில பொதுச்செயலாளருமான தமிழியலன்,வந்தவாசி கெளரவத்தலைவர் பொறிஞர் பூ.காளிமுத்து,குழந்தை எழுத்தாளர் இரா.மனோன்மணி,அ.அண்ணாமலை தமுஎகச மாவட்டப் பொருளாளர்,தொழிலதிபர்கள் இரா.சிவக்குமார்,அ.ஜ.இஷாக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கவிஞர் ஆரிசன் ஏற்புரை வழங்கினார்.தமிழ்ராசா நன்றி கூறினார்.
    நூல் குறித்து கவிஞர் ஜீவி நிகழ்த்திய இலக்கிய உரையிலிருந்து.....
-------------------------------------------------------------------------------------------------
               திண்ணைகளை இடித்துவிட்டு வரவேற்பறைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலும்,தொலைக்காட்சிப்பெட்டியில் தொலைந்து போகிற மக்களை (இந்த வந்தவாசி திண்ணையில், தமுஎகச அரங்கு நிறைய) கவிஞர் ஆரிசனின்  ’வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மக்கள் திரளோடு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.காலையில் கைது/மாலையில் விடுதலை/ஞாயிற்றுக்கிழமைத்தமிழன் என்று ஒரு புதுக்கவிஞன் பேசுகிறான்.1940ல் எழுத்து இயக்கத்தாலும்,1970களில்வானம்பாடி இயக்கத்தாலும்,1980களில் மக்கள் கவிஞர்களாலும் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு வரும் புதுக்கவிதைகள் பல்வேறு தளங்களில் வெளிப்பட்டு வருகிறது.கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள்.இந்நிலையில் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிச்ச விதைகளாக ஆரிசனின் கவிதைகள் இருக்கின்றன.புதிய பொருளாதாரக் கொள்கைகளில் குறைந்து போயிருக்கிற மனித நேயம்,மதவெறியால் நடக்கிறபடுகொலைகள்,பாதகச் செயல்கள் இவற்றுக்கிடையேதான் ஆரிசனின் கவிதைகள் பரிணாமம் பெறுகின்றன.’மதம் குலைத்துப் போடுகிறது வானவில்லின் ஒற்றுமையை’என்று சரியாக கவிஞர் ஆரிசன் தனது வேட்கையின் நிழலில் பதிவு செய்திருக்கிறார்.தமுஎகசஎனும் பிரம்மாண்டமான இலக்கிய அமைப்பின் விரிந்து பரந்த  மேடைகளில் பல கவிஞர்களும், படைப்பாளிகளும்,கலைஞர்களும் அறிமுகமாகி பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை செய்து வருகிறார்கள்.பாரதி,பாரதிதாசன்,பட்டுக்கோட்டை தொடங்கி இப்போது எழுதுகிற புதுக்கவிஞர்கள் வரை பகிர்ந்து கொள்ளும் மேடையாக தமுஎகச விளங்கி வருகிறது.ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
                               எதையும்- எல்லாப் பொருட்களில் இருந்து பலரும் பார்க்காத,பலருக்கும் தெரியாத நுட்பத்தைக் கண்டறிந்து சொல்பவனே கவிஞனாவான்.இப்படி எழுதும் கவிதைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.இந்த வரலாற்றை நேக்கிக் கவிஞர்கள் பயணிக்க வேண்டும் இதுமட்டுமின்றி .படைப்பை மட்டுமல்ல படைப்பாளியை உருவாக்குகிற மனோபாவம் கவிஞர்களுக்கு வேண்டும்.அது இயல்பாகவே கவிஞர் ஆரிசனுக்கு வாய்த்திருக்கிறது.படைப்பாளியின் படைப்பு மனத்தை அங்கீகரிக்க குடும்பச்சூழல்,சமூகச்சூழல் அமைகிற போது தான் ஒரு கவிஞனோ,படைப்பாளியோ உச்சம் பெறுகிறான்.இதன்றி விட்டு விட்டுப் போன பின்னும் விரல் தொட்டு அழைத்து நம்மோடு ஒரு ஞாபக யுத்தம் நடத்துவது தான் கவிதை! அத்தகைய கவிதைகளை,கவிஞர்களை உருவாக்குவதற்கு அரங்கம் நிறைந்த ரசிகர்களோடு விளங்கும்  இந்தத் திண்ணை நிகழ்வுகள் நம்பிக்கையூட்டுகிறது.பல்வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருக்கிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கவும்,சமூக அக்கறையோடு விவாதிக்கவும் இந்தத் திண்ணை மேலும் மேலும் விரிவடையட்டும்.உங்கள் வந்தவாசி ஊரே அதற்கு சாட்சியாக விளங்கட்டும்.தமுஎகச வந்தவாசி கிளைக்கும், நூல் வெளியிட்ட கவிஞர் ஆரிசனுக்கும்,கிளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, November 10, 2010

திண்ணை 81-இளம் இயக்குனர் பிரியஷரண்-உரை

நான் ஊரீஸ் மேனிலைப்பள்ளி,வேலூரில் படித்தவன்,எனக்குப் பாடம் நடத்திய மாணிக்கம் ஆசிரியரை மறக்கமுடியாது.சினிமாவுக்கான கனவுகளை என் மனதில் விதைத்தவரும் அவரே!பைபிள் கதைகளை அடியொற்றி நாடகங்கள் மாணவர்களை வைத்துப் போடுவார். நடிக்கும் மாணவர்களைப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் வட்டமிடும்.என் விருப்பத்தை ஆசிரியரிடம் சொன்னேன்,உரிய நேரம் வரும் நடிப்பாய் என்று சொன்னார்.எனக்குள்ளான சினிமாக் கனவுகள் மலரத்தொடங்கியது.நான் கனவுகள் சுமந்து சென்னைக்கு சென்றேன்.பல சினிமாக் கம்பெனிகள் வாயிற்கதவுகளைத்தட்டினேன்.எனது நண்பர் மூலமாகதெலுங்குப் பட இசையமைப்பாளர் மணிஷர்மாவைச்சந்தித்தேன்.கதை சொன்னேன்.அவர் நண்பர் ஒருவரிடம் கதை சொல்லச் சொல்லி அனுப்பினார்.அவரிடமும் போய் சொன்னேன்.இறுதியில் படத்தை இயக்க வாய்ப்பு தந்தார் மணிஷர்மா.அவரது தயாரிப்பில் ”ஹேப்பி ஹேப்பி ஹா”எனும் படத்தை இயக்கி தெலுங்குப்பட உலகில் சாதனை படைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.என்னை அடிக்கடி தொடர்புகொண்டு என்வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரிக்கும் பூங்குயில்சிவகுமாரையும் மறக்கமுடியாது..தெலுங்கு சினிமா உலகத்தில் தமிழாட்களை நன்கு மதிக்கிறார்கள்.உரிய மரியாதையோடு நடத்துகிறார்கள்.இந்தநாளிலே தேசியவிருது பெற்ற வந்தவாசியைச் சேர்ந்த ஆசிரியர் பொன்.விஜயகுமார் அவர்களுக்கும் பாராட்டு விழாவும் நடக்கிறது.இது எனக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆசிரியர்களே திறவுகோளாக இருக்கிறார்கள்.அது என் வாழ்விலும் நடந்திருக்கிறது.இந்த இனிய நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பளித்த தமுஎகச,வந்தவாசி கிளைக்கும் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி.

Sunday, November 7, 2010

திண்ணை-81 :புகைப்படங்கள்

இளம் திரை இயக்குனர் பிரியஷரண் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற வந்தவாசியைச் சேர்ந்த திருமிகு.பொன்.விஜயகுமார் அவர்களின் புகைப்படங்கள்..பதிவு

திண்ணை-81(07.11.2010 ஞாயிறு)

பாராட்டை ஏற்றுக்கொண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு.பொன்.விஜயகுமார் பேசுகையில்...
                                            நான் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலையில் நான் மாடு மேய்க்கப் போக வேண்டும்.நான் தேசூர் அரசு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி யில் இரண்டாவது மதிப்பெண் பெற்றுத் தேறினேன்.எனக்கு கணித ஆசிரியராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.இருந்தாலும் அப்போது எனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதி இல்லை.செய்யாறு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.இந்நிலையில் வந்தவாசிக்குச் சென்று டைப் (தட்டச்சு)கற்றுக்கொள்ள வீட்டில் முடிவு செய்தனர்.அதற்காக ஒரு சைக்கிள் வாங்க பெற்றோர் மிகவும் சிரமப் பட்டனர்.அந்த நேரத்தில் தான் எனக்கு திண்டிவனம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதல் மாணவராக சேர்த்துக்கொள்ளும் உத்திரவு வந்தது.பெற்றோர்களின் கூலி மூலமும் கடனிலும்  ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.முதன்முதலில் எனக்கு மகமாயிதிருமணி என்னும் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணியைத் துவக்கினேன்.கொரக்கோட்டை,தெள்ளாறு,மீசநல்லூர்,டி.மாம்பட்டு,கொண்டையாங்குப்பம்,
பொன்னூர்,கொடியாலம்,என பல்வேறு பள்ளிகளில் பணி செய்து இன்று கூத்தம்பட்டு நடுநிலைப்  பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.நான் பணியாற்றி இடங்களில் எல்லாம் கிராம பொது மக்களும்,தலைவர்களும் அதிக அளவில் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.அவர்களுக்கெல்லாம் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.சில தலைவர்கள் என் பணியைப் பாராட்டி, பாராட்டுவிழாக்களும், பரிசும்,கடிதங்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.எனது உழைப்பும்,பணியும் வீண்போகவில்லை என்று நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது.2006ம் ஆண்டில் எனக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தது.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.இந்த ஆண்டு(2009ம் ஆண்டுக்காண)தேசிய நல்லாசிரியர் விருதினை நான் டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கையால் விருது வாங்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்.என் வாழ்வில் மிகப் பெரும் சொர்க்கத்தைக் கண்ட உணர்வு ஏற்பட்டுள்ளது.ஒரு சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த விருது வாழ்க்கையில் நான் அடைய நினைத்த எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்ததாக நினைக்கிறேன்.என் பெற்றோர்களுக்கும்,இறைவனுக்கும் இதை காணிக்கையாக்கிக்கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.இத்மட்டுமின்றி எனது துணைவியார் திருமதி சி.பத்மாபாய் அவர்களும் நான் டெல்லியில் ஜனாதிபதியிடம் விருது வாங்கும் போது அவர்கள் தமிழகாரசின் நல்லாசிரியர் விருதை அதே05.09.2010அன்று சென்னையில் வாங்கினார்கள் என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத்தருகிறது.நான் முடிந்த மட்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்,முடியவில்லையானால் சும்மா இருந்துவிடுவேன்.யாருக்கும் தொந்திரவு செய்யமாட்டேன்.என் பணியில் சற்று கடுமையாக இருப்பேன்.”நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” எனும் குறுந்தொகைப் பாடல் வரிகளில் என் நிஜத்தைத் தெரிந்து கொள்ளலாம் என சொல்லி முடிக்கும் போது திண்ணை வாசக நேச நெஞ்சங்களுக்கும் வறிய வாழ்வு சிகரம் தொட்டவெற்றியைப் போற்றிய தமுஎகச வின் திண்ணை நிகழ்வுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.இது வீரர் பிறந்த மண்ணு-இதில்
நாமெல்லோரும் ஒண்ணு என்று பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டோடு,இது கற்றவர் நிறைந்த மண்ணு,கொற்றவரும் திரும்பிப்பார்த்து கேட்கவைக்கும் மண்ணு,கதை..கவி செய்யும் இலக்கிய ஆற்றல் நிரம்பிய மண் என வந்தவாசியைச் சொல்லாமல் இருக்க முடியாது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்,வந்தவாசி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-81 இலக்கிய நிகழ்வு இன்று காலை 11.00மணிக்கு காளி முனுசாமி செட்டியார் சத்திரம்,தேரடி,வந்தவாசியில் தோழர் ந.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
                 
                                 நிகழ்வு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு பொன்.விஜயகுமார் அவர்களுக்குப் பாராட்டும்,இளம் திரை இயக்குனர் பிரியஷரண் தன் திரை இயக்கம் குறித்த பகிர்வுகளுமாக நடைபெற்றது.முனைவர் ம.மஹாலட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பூங்குயில்சிவகுமார் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

                    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.பொன்.விஜயகுமார் அவர்களைப் பாராட்டி பழ.சீனுவாசன்,முதல்வர் ஜோதி நிதி உதவிப் பள்ளி,தெள்ளாறு ,கவிஞர்.ஆரிசன்,தமுஎகச,மாவட்டசெயலாளர்,அ.அண்ணாமலை,மாவட்டப் பொருளாளர்,அ.ஜ.இஷாக்,ஜவுளி அதிபர் ஆகியோர் பேசினர்.நிகழ்வில் கிளை நிர்வாகிகள் இரா.சிவகுமார்,இர.இராமலிங்கம் மற்றும்திரு சக்திவேல்,உதவி தொடக்கக்கல்வி அலுவலர்,வந்தவாசி;பொன்னெழில்சந்திரன்,தலைமையாசிரியர்; ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் கிளை பொருளாளர் கி.உதயகுமார் நன்றி கூறினார்.

Saturday, November 6, 2010

Friday, November 5, 2010

கவிதை

வீதியில் கொளுத்திப் போட்டனர்
ஊர் முழுக்க
புரளி.

ஒளியின் விட்டத்தில்
சுற்றிச் சுழன்றது
சங்கு சக்கரம்.

திரிக்க முடியாமல்
கொளுத்தியது குழந்தை
தீபாவளிக் கயிறு.

வளைக்க முடியவில்லை
கம்பியைச் சுற்றிலும்
ஒளி விழுதுகள்.

எப்போதும் ஓடும்
ஜீவநதியோ?
ஹைக்கூ.

தரையில் நின்று
பூ மழை பொழிகிறது
புஸ் வானம்.

தரையில் புழுதி கிளப்பி
வானத்தில் இடி இடிக்கிறது
ஒபாமா வருகை.

தீபாவளி-2010

குழந்தைகள் வானத்தில் தீபாவளி..

by Aari Aarison on Thursday, November 4, 2010 at 9:18pm
புஸ்வானம் கொளுத்தினேன்குப்பிக்குள் பூத்திருந்த மலர்களின் வாசத்தை உணரமுடிந்தது..கயிறு கொளுத்திப்பார்த்தேன்ஒளி சிந்தும் அழகை ரசிக்க முடிந்தது.தீபமாய் எறிந்த விளக்கில்சுறு சுறு கம்பியை நீட்டினேன்சிதறிய ஒளியின் அழகை உணர முடிந்தது.கட்டாந்தரையில் சங்கு சக்கரம் கொளுத்தினேன்வாழ்வின் சுழற்சியை வாசிக்கமுடிந்தது..கருப்பு மாத்திரையை கொளுத்தினேன்படமெடுத்து ஆடிய பாம்பின்கொதிப்பை அறிய முடிந்தது.மத்தாப்புக்குச்சியைஉரசிப்பார்த்ததில்மெளனத்தின் அழகில் கரைய முடிந்தது..வெடிச்சத்தம் உணர மறுத்தவெகுளித்தனம் நிறைத்த குழந்தைகள் வானத்தில்குதூகலமாய் கொண்டாடப் படுகிறது..தீப ஒளித்திருநாள்!