Popular Posts

Wednesday, November 10, 2010

திண்ணை 81-இளம் இயக்குனர் பிரியஷரண்-உரை

நான் ஊரீஸ் மேனிலைப்பள்ளி,வேலூரில் படித்தவன்,எனக்குப் பாடம் நடத்திய மாணிக்கம் ஆசிரியரை மறக்கமுடியாது.சினிமாவுக்கான கனவுகளை என் மனதில் விதைத்தவரும் அவரே!பைபிள் கதைகளை அடியொற்றி நாடகங்கள் மாணவர்களை வைத்துப் போடுவார். நடிக்கும் மாணவர்களைப் பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் வட்டமிடும்.என் விருப்பத்தை ஆசிரியரிடம் சொன்னேன்,உரிய நேரம் வரும் நடிப்பாய் என்று சொன்னார்.எனக்குள்ளான சினிமாக் கனவுகள் மலரத்தொடங்கியது.நான் கனவுகள் சுமந்து சென்னைக்கு சென்றேன்.பல சினிமாக் கம்பெனிகள் வாயிற்கதவுகளைத்தட்டினேன்.எனது நண்பர் மூலமாகதெலுங்குப் பட இசையமைப்பாளர் மணிஷர்மாவைச்சந்தித்தேன்.கதை சொன்னேன்.அவர் நண்பர் ஒருவரிடம் கதை சொல்லச் சொல்லி அனுப்பினார்.அவரிடமும் போய் சொன்னேன்.இறுதியில் படத்தை இயக்க வாய்ப்பு தந்தார் மணிஷர்மா.அவரது தயாரிப்பில் ”ஹேப்பி ஹேப்பி ஹா”எனும் படத்தை இயக்கி தெலுங்குப்பட உலகில் சாதனை படைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.என்னை அடிக்கடி தொடர்புகொண்டு என்வளர்ச்சி குறித்து அடிக்கடி விசாரிக்கும் பூங்குயில்சிவகுமாரையும் மறக்கமுடியாது..தெலுங்கு சினிமா உலகத்தில் தமிழாட்களை நன்கு மதிக்கிறார்கள்.உரிய மரியாதையோடு நடத்துகிறார்கள்.இந்தநாளிலே தேசியவிருது பெற்ற வந்தவாசியைச் சேர்ந்த ஆசிரியர் பொன்.விஜயகுமார் அவர்களுக்கும் பாராட்டு விழாவும் நடக்கிறது.இது எனக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆசிரியர்களே திறவுகோளாக இருக்கிறார்கள்.அது என் வாழ்விலும் நடந்திருக்கிறது.இந்த இனிய நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பளித்த தமுஎகச,வந்தவாசி கிளைக்கும் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி.